Homeசெய்திகள்தமிழ்நாடுவிசாரணைக் கைதி தப்புவிப்பு: கோவை மத்திய சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் - அன்புமணி கண்டனம்..!!

விசாரணைக் கைதி தப்புவிப்பு: கோவை மத்திய சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் – அன்புமணி கண்டனம்..!!

-

- Advertisement -

Anbumani Condemns Coimbatore Jail Admin over Under-trial Prisoner's Escape
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சிறைகளில் கைதிகள் தொடர்ந்து தப்பி ஓடும் நிகழ்வுகளைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர்  அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அலட்சியத்தால் நடந்த சம்பவம்:

கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி இராகவன் என்பவரை அன்னூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் வந்தனர்.

we-r-hiring

அப்போது, சிறை வளாகத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் இருந்து இராகவன் திடீரென தப்பி ஓடினார். ஏற்கனவே அன்னூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டபோதே, காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய இராகவனை அதிகாரிகள் துரத்திச் சென்றுதான் பிடித்தனர். அத்தகைய பின்னணி கொண்ட ஒரு கைதியை, சிறை நிர்வாகம் கூடுதல் பாதுகாப்புடன் கையாண்டிருக்க வேண்டும் என்றும், சிறைக் காவலர்களின் அலட்சியப் போக்கே இந்த அசம்பாவிதத்திற்கு முழுக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
anbumani Ramadoss

தொடர்க கதையாகும் கைதிகள் தப்புவிப்பு:

கடந்த வாரம் சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சி அடங்குவதற்குள், தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். அந்த வரிசையில் தற்போது கோவையிலும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தையும், சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

வலுவான பாதுகாப்புக்குக் கோரிக்கை:

இதுகுறித்து தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள  பா.ம.க தலைவர்  அன்புமணி இராமதாஸ், “சிறைக் கைதிகள் இதுபோன்று அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. கோவை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி இராகவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக சிறைகளின் பாதுகாப்பை பலப்படுத்தி, இதுபோன்ற தொடர் சம்பவங்கள் இனி நிகழாத வண்ணம் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய கைதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

MUST READ