Homeசெய்திகள்தமிழ்நாடுவரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

-

காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

Highcourt

தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு,திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் உத்தரவில், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கிய பங்காற்றுவதாகவும், இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்களை போல அதிகரித்து வருவதாக தெரிவித்ததுடன், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். சில ஹோட்டல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவு வழங்காமல் பொதுமக்களுக்கு உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

MUST READ