spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்...தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்…தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

-

- Advertisement -

 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்...தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

we-r-hiring

2024- ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காலத்தை வென்ற ‘கலைஞர் 100’ விழா சிறப்பு ஏற்பாடுகள்……கலைஞராக நடிக்கும் நட்சத்திரங்கள்!

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன்பு வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கோட்டாட்சியர் வாசிக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் போட்டி தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதிக காளைகளை அடக்கும் காளையர்களுக்கு கார், இருசக்கர வாகனம் போன்ற பரிசுகளும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனம் போன்ற பரிசுகளும் காத்திருக்கின்றன.

அதேபோல், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், அண்டா, இருக்கைகள், சைக்கிள் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் லாவகமாக அடக்கி வரும் காட்சி காண்போரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!

இதனிடையே, தமிழகத்தைத் தொடர்ந்து முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.06) நடைபெறுகிறது. இலங்கை திருகோணமலை சம்பூரில் காலை 10.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. இந்த நிகழ்வில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஜல்லிக்கட்டு போட்டியில் 300- க்கும் மேற்பட்ட காளைகளும், 150- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

MUST READ