spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு... த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு… த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

-

- Advertisement -

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, தமிழக மக்களின் ஆசீர்வாதத்தாலும், அமோக ஆதரவாலும் நாம் 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை நூறு சதவீதம் உள்ளதாக தெரிவித்தார்.

we-r-hiring

அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மை நம்பி நம்முடன் சிலர் வரலாம் என்றும், அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் என்றும் குறிப்பிட்ட விஜய், அப்படி வருபவர்களை நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் நமக்கு எப்பொழுதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம் என்றும்,  அதனால் நம்மை நம்பி நம்முடன் களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு செய்யப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு என்றும் விஜய் சூலுரைத்தார்.

 

MUST READ