spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

-

- Advertisement -

முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

mkstalin

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அதில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளது

we-r-hiring

மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. வேலை செய்யாமல் இருக்கும் அமைச்சர்களுக்கு பதவி பறிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ