தமிழ்நாடு அரசு சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பி சு.வெங்கடேசன் கூகையில்,
இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட உள்ளது.
SBI யின் முதன்மை தேர்வு தேதியை மாற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

20 நாட்கள் கடந்துள்ளது விரைவாக முடிவெடுப்போம் என்று சொல்லுகிறார்களே தவிர முடிவெடுக்க தவிர்க்கிறார்கள். ஆனால் இப்போது வரை அதற்கு எந்த பதிலும் இல்லை.
தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய பதவிக்கான ஒரு தேர்வு 6 கோடி தமிழ் மக்களுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.
தமிழ்நாட்டின் குரலை வஞ்சிப்பது தமிழ்நாடு பெயர் குறிப்பிடுவதை தவிர்ப்பது, தமிழ்நாட்டின் இலட்சினை மறுப்பது தேர்தல் நடக்கின்ற மையங்கள் முழுக்க எஸ் பி ஐ வங்கியின் ஊழியர்கள் தேர்வு பணியாளர்களாக பயன்படுத்த வேண்டும்.
இப்படி, தேர்வார்கள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல அது தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை. தமிழர்களின் அடையாளத்தையும், உரிமையையும் தொடர்ந்து மறுக்கிற பாஜக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வலிமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.
கடந்த ரம்லான் பண்டிகை தேதியில் கூட நாடாளுமன்றம் நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழர்களின் உரிமையையும் பறிக்கின்றனர்.
இந்தியா என்பது அனைத்து தேசியத்திற்கும் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் உரிமை தமிழ்நாட்டின் நலனை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.

இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவில் வைக்கப்படுகிறது. வேறு ஒரு நாள் வைக்க வேண்டும்.
இதுவே, விநாயகர் சதுர்த்தி அன்று இதுபோல தேர்வு வைப்பார்களா.?
இந்தியாவில் மற்ற மாநிலத்திற்கு வேறும், தமிழ்நாட்டிற்கும் வேறாகவும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர் விரோத போக்கு அரசாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று தேர்வு வைத்து திருநாளை கொண்டாட முடியாதது போல் ஒன்றிய அரசு செயல்படுகின்றனர்.
தேர்தல் தேதியை மாற்றும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.
தமிழ்நாடு அரசு சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு பெயர், தமிழ்நாடு இலச்சினை போன்று தொடர்ந்து
தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கின்றனர்.
தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சு.வெங்கடேசன் எம்.பி-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்த பிறகு அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
