Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை ஆத்துப்பாலம் - உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு -...

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!

-

- Advertisement -

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சி.சுப்பிரமணியத்தின் புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MUST READ