spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்

காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்

-

- Advertisement -

காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்

காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி மேயரிடம் மனு கொடுத்த மாவட்ட காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

water bottle

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் காலி தண்ணீர் பாட்டிலை மாலையாக அணிவித்து முதல் முறையில் மனு அளிக்க வந்தார். பொதுமக்களுடன் மனு அளித்த அவர், பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடபுறம் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பாசாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நான்கு மாதங்களாக முறையாக கிடைப்பதில்லை.

we-r-hiring

water bottle

ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த குடிநீர் பிச்சை சீர் செய்யாவிட்டால் மாநில காங்கிரஸ் தலைவரிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய அளவில் காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்

MUST READ