spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்... தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!

-

- Advertisement -

ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து வீட்டில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

we-r-hiring

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்டம் கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டம் வீட்டில், இன்று சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் கிளியனூர் ஆய்வாளர் கலையரசி மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது டாக்டர் ராமதாசிடம் ஒட்டுகேட்பு கருவி தொடர்பான விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர். இதை அடுத்து அங்குள்ள ஊழியர்களிடமும்  விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

MUST READ