Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டில் பெரியார் சிலை வைத்த விவகாரம்- வட்டாட்சியர், டிஎஸ்பி பணியிடமாற்றம்

வீட்டில் பெரியார் சிலை வைத்த விவகாரம்- வட்டாட்சியர், டிஎஸ்பி பணியிடமாற்றம்

-

- Advertisement -

தனிநபர் வீட்டில் மதில் சுவரில் பெரியார் சிலை வைத்த விவகாரத்தில், சிலையை அகற்றிய வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வீட்டில் நிறுவப்பட்ட பெரியார் சிலை அகற்றம்- டிஎஸ்பி, வட்டாட்சியர் பணியிட  மாற்றம்

we-r-hiring

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் அருகே உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் புதிய இல்ல வளாகத்தின் முன்பு நீதிமன்ற அனுமதியுடன் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அகற்ற காரைக்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் வலியுறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது. யாரும் புகார் அளிக்காத நிலையில், சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதனால் சிலையை அகற்றும்படியும், அதிகாரிகள் தரப்பில் இளங்கோவனிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் இளங்கோவன், நீதிமன்றம் அனுமதி தந்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பெரியார் சிலை துணியால் மூடி சிலையை அகற்றும் பணியை தொடங்கிய அதிகாரிகள் தொடங்கினர். சிலையை பாதுகாப்பாக அகற்றி சரக்கு வாகனத்தில் ஏற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இதில் தொடர்புடைய தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் சிவகங்கை திட்ட வன அலுவலராக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்குடியில் தனியார் பட்டா இடத்தில் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டிருந்த மார்பளவு பெரியார் சிலையை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதற்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ