Homeசெய்திகள்தமிழ்நாடுதனக்கு சரியான இருக்கை ஒதுக்கவில்லை எனக்கூறி குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்.பி.

தனக்கு சரியான இருக்கை ஒதுக்கவில்லை எனக்கூறி குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்.பி.

-

- Advertisement -

குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் அரசு நடைமுறை விதிகளின் படி, தனக்கு இருக்கை ஒதுக்க‌ வில்லை என்று கூறி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம், அப்துல்லா சேமப்படை மைதானத்திற்கு வந்துவிட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 புறக்கணித்த எம்.பி?

we-r-hiring

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் விழா நடைபெறும் சேமப்படை மைதானத்தில் பார்வையாளர்கள் அரசு நடைமுறை விதிகளின்படி(protocal) படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்பி எம்எல்ஏ உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்எல்ஏ எம்பி ஆகியோருக்கு இருக்கைகளும் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா சேமப்படை மைதானத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது எம்எல்ஏ எம்பி ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் தனது காரில் ஏறி சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.

MUST READ