Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…

அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…

-

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.

தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.

தஞ்சை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பள்ளியின் அழகை மேலும் மெருகூட்டுவதற்காகவும், வரலாற்று பெருமிதங்கள் மற்றும் சிறந்த நல்லொழுக்கம் மாணவர்கள் மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காக பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்து சுற்று சுவர் முழுவதும் பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தமிழின் பெருமையை காட்சியாகக் கொண்டுள்ளன.

நுழைவாயிலின் இருபுறமும் உள்ள சுற்றுச்சுவரில் ஒரு பக்கம் தமிழர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் மற்றொரு சுவரில் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய நற்பண்புகள் மற்றும் சமூக கடமைகள்‌ ஆகியவற்றைமாணவர்கள் எளிதில் புரியும் வகையில் வண்ண ஓவியங்களால் வரையப்பட்டுள்ளது.காண்போரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது.

முக்கியமாக மன்னர்கள் காலத்து கண்ணகி, குயிலி உள்ளிட்ட தமிழர்களின் பல வரலாற்று சிறப்புகளை‌ எடுத்துரைக்கும் விதமாக நிகழ்வுகள் வசனங்களுடன் வரையப்பட்டுள்ளது.

 

அதேபோல் மனிதமே கடவுள் என்பதை உணர்த்தும் ஓவியமும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓவியமும், தாய்மொழியே உண் முகம், வாழ்வின் செம்மையை செய்பவள் நீயே என்கிற பாரதிதாசனின் அழகிய கவிதையுடன் “குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து வலைந்து “ழ” என்ற தமிழ் வார்த்தையை அருமையாக வரையப்பட்டுள்ளது.

இதுபோன்ற எண்ணற்ற வகையான ஓவியங்கள் எளிதில் மனதில் பதியும் வகையில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ‌ அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பார்த்து வியந்து செல்கின்றனர்.

MUST READ