spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

எப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

"பா.ஜ.க.வை அ.தி.மு.க. பாதுகாக்கிறது"- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
Video Crop Image

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல்துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு

உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ