Homeசெய்திகள்தமிழ்நாடுஇரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டி?

இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டி?

-

- Advertisement -

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.

அதிமுக தென்னரசு

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு ஆதரவை திரட்ட எடப்பாடி அணியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் தங்களது விருப்பத்தை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். பிரமாண பத்திரத்தில் வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொது செயலாளர் தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Home

பொதுக்குழுவில் பழனிசாமிக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளதால் அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளராகிரார் தென்னரசு. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுக்குழுவில் சொற்ப ஆதரவே இருப்பதால் வேட்பாளரை வாபஸ் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ