Homeசெய்திகள்தமிழ்நாடுசில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

-

உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.

சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது - அமைச்சர் கே.என்.நேருசென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மக்களுக்கான திட்டங்களை விரைந்து செய்ய வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் இந்த கூட்டம் இல்லை.

எவ்வளவு அறிவுறுத்தினாலும் சரியாக பணி செய்யாமல் , நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்.

தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம் பணிகளை தினம்தோறும் கண்காணிக்க வேண்டும்.

மழைக் காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

நகர்ப்புற நீர்நிலைகள் பாரமரிப்பை நகராட்சி நிரவாகத்துறை கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

மழைக் காலத்திற்கு முன் சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்.

பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகாலுக்காக நோண்டப்பட்ட பள்ளங்கள் சுற்றி பாதுகாப்பு அம்சங்கள் முறையாக இருக்க வேண்டும்.

 

MUST READ