Homeசெய்திகள்தமிழ்நாடுமிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!

மிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!

-

- Advertisement -

 

மிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!
Photo: Police

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிதி நிறுவன மேலாளர்களிடம் இருந்து 16.30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

ஆற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஆர் என்ற நிதி நிறுவனத்தில் இருந்து 16.30 லட்சம் ரூபாயை இரு சக்கர வாகனத்தில் மேலாளர்கள் கொண்டுச் சென்ற நிலையில், கலவை என்ற பகுதி அருகே மிளகாய் பொடியைத் தூவி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கலவை காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், செய்யாறு பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டன், கந்தன், வெங்கடேசன், யுவராஜ், ஆகாஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திக் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார்’- அரசாணை வெளியீடு!

பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ