spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜகவால் நிலையான ஆட்சியை தர முடியாது - திருமாவளவன் பேட்டி!

பாஜகவால் நிலையான ஆட்சியை தர முடியாது – திருமாவளவன் பேட்டி!

-

- Advertisement -

பாஜகவால் நிலையான ஆட்சியை தர முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

we-r-hiring

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., . மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் தனித்துப் போட்டி, கேரளாவில் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி, இந்த குறைபாட்டோடு தேசத்தை ‘இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை. “இந்தியா கூட்டணி இன்னும் பக்குவம் பெற வேண்டும். அதற்கான கால அவகாசம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்அம்பேத்கர் கொள்கைக்கு நேர்மாறாக மோடி செயல்படுகிறார்.

விஜயபிரபாகரன் சட்டப்பூர்வமாக போராடுவது நல்லது. விருதுநகர் தொகுதி மக்கள் கொடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு விஜயபிரபாகரன் சட்டப்பூர்வமாக போராட வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் உரிய பாடம் புகட்டினாலும் தமிழ்நாட்டை பாஜகவினர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவால் நிலையான ஆட்சியை தரமுடியாது என இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ