Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் பிறப்பு, சாதி, பாலினம் மூலம் பாகுபாடு பார்ப்பது...

இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் பிறப்பு, சாதி, பாலினம் மூலம் பாகுபாடு பார்ப்பது இல்லை- திருமா

-

- Advertisement -

அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவன் நான், அதனால் தான் நான் சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாலிபால் மைதானம் மற்றும் திறந்தவெளி கலையரங்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் சஞ்சய் பஸ்வான், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி எகேஎஸ் விஜயன், கணேசமூர்த்தி எம்பி, உளிட்டோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நர்சிங் படிப்பை முடித்த 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

we-r-hiring

நிகழ்ச்சியில் பேசிய தொல்.திருமாவளவன், “நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட கட்சி அமைப்புகளுக்கு எதிரானவர்கள் அல்ல, கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருப்பதால் மட்டுமே நாங்கள் சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறோம். அதைத் தவிர்த்து எந்த முன் விரோதமும் பகையும் கிடையாது. அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவன் நான், அதனால் நான் சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறேன். அவ்வாறு கொள்கை ரீதியான முரண்பாடு உள்ள பாஜகவின் மூத்த தலைவர் உள்ள ஒரு மேடையில் நாம் இணைந்திருக்கிறோம் என்றால் மற்ற அனைத்தையும் விட மனித நேயம் மிக முக்கியமானது.

அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகளை உள்ளடக்கி இருந்தாலும் மனிதநேயமே உயர்ந்தது. அதேபோல் நாங்கள் மதச்சார்பற்றவர்கள் அதனால் சங்க பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறோம். மேலும் நாங்கள் சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கிய சமூக நீதி, சம உரிமை, மதசார்பில்லை சட்டத்தை பின்பற்றுகிறோம். அதேபோல் நவீன இந்தியாவிற்கு ஜாதி, மத வேறுபாடுகள் மற்றும் மனித பாகுபாடு வேண்டாம் என்ற அம்பேத்கரின் முழக்கத்தை நாங்கள் பின்பற்றுவதால் சங்பரிவார் அமைப்புகளை எதிர்க்கிறேன்.

அம்பேத்கரின் இந்த சட்டத்தால் எந்த பாகுபாடும் இல்லாததால் மாற்று கருத்து உடையவர்கள், ஒரே மேடையில் அமர்ந்து எங்களுடைய கருத்துக்களை நாங்கள் பேசுகிறோம், உங்களுடைய கருத்துக்களை நீங்கள் பேசுகிறீர்கள். மேலும் தமிழகத்தில் மனிதன் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவுகளை கலக்கும் கொடூரமான நிகழ்வு நடந்தது. ஆனால் தமிழகம் அமைதியாக இருக்கிறது வேடிக்கை பார்க்கிறது, இதை சகித்துக் கொண்டிருக்கிறது, இதை கடந்து போக பார்க்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் எந்த சாதி, எந்த மதம் என்று பார்க்க வேண்டாம், எந்த மொழி பேசுகிறார் என்பதை பார்க்க வேண்டாம். அவன் ஒரு மனிதன் என்று பார்க்க வேண்டும். இதை மனிதாபிமான அடிப்படையில் தைரியமாக கண்டிக்க வேண்டாமா? இந்த கேள்விக்கு விடையில்லை.

thirumavalavan

பெரியார் வாழ்ந்த, வாழும் வரை போராடிய இந்த மண்ணில் இன்னமும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கிறது என்று சொன்னால் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த காலத்திலும் இப்படி நடந்து கொள்கிறார்கள் பெரிய பெரிய பட்டப்படிப்பு படித்து என்ன பயன்? மனித நேயம் கூட தெரியாமல் கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். சம்பாதிக்க படிப்பு தேவையில்லை, நாகரீகத்தை வளர்த்துக் கொள்ளவே படிக்க வேண்டும். இன்று இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் ஏன் பிற மதங்களை விமர்சிப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஒரே விடை இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் பிறப்பு, சாதியை வைத்தோ, பாலினம் பாகுபாடுகள் பார்ப்பது இல்லை அந்த ஒரு காரணத்திற்காக நாம் விமர்சிக்கிறோம்.

ஆரிய சமாஜம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிய தயானந்த சரஸ்வதி சாமிகள், பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது வரலாற்றை படிக்கும் போது அவர் பெரியாரை விட பன்மடங்கு பேசியுள்ளார். பெரியாரை விட வேகமாக செயல்பட்டுள்ளார், நீங்கள் பேசும் புராணங்கள் அனைத்தும் குப்பைகள் என பேசியவர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அவர் சுவாமி தரிசனம், வெற்றியில் திலகம் இடுவது பெண்களை அடிமைப்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார்” என தெரிவித்தார்.

MUST READ