அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மே 31- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே இந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.
பேனர், கட் அவுட் கூடாது- விஜய் உத்தரவு
இதனிடையே தற்போது, செந்தில் பாலாஜியிடம் உள்ள துறைகளை மாற்றி அமைக்கக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் கடிதத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு- வழக்கின் பின்னணி!
இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.