மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய அதிரடித் தாக்குதல் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறனற்ற தன்மையையும், முதல்வரின் கடந்த காலப் பின்னணியையும் எவ்விதத் தயவுதாட்சன்யமும் இன்றி அடியோடு சாடிப் பேசியுள்ளார். சீமானின் இந்த உரை அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது.
“நிர்வாகத் திறனற்ற ஜோசப் விஜய் – இதுவா மாற்றம்?”
ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது வராத ஜோசப், அரசியலுக்கு வரும்போது மட்டும் ஜோசப்பா? இப்போது முதலமைச்சர் ஆன பிறகு என்ன பெயரிடுவது? என்று கடும் தொனியில் கேள்வி எழுப்பிய சீமான், “உங்களை மாதிரி ஆசைப்பட்டு முதலமைச்சராக வந்தவன் நான் அல்ல; காலம் என்னை இந்தச் சுமையில் இறக்கிவிட்டுள்ளது” என்றார். மேலும், பேருந்து நிலையங்கள் முழுவதும் ‘வெற்றியை நோக்கி தமிழகம்’ என்றும், ‘717 மதுக்கடைகளை மூடியது வெற்றி’ என்றும் விளம்பரப் பதாகைகளை வைப்பதைக் கிண்டலடித்த அவர், “இவர்கள் ஒன்லி ரீல்ஸ் தான்; ரூல்ஸ் பண்ணுவது கிடையாது” என்று சாடினார்.

“கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றவன் இன்று அமைச்சரவையில்!”
ஆளுங்கட்சியினரின் ஊழல்களையும், கடந்த கால நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்த சீமான், “திற நிதி திருடர்கள் என்று எங்களைச் சொல்கிறார்கள். இவ்வளவு நாளும் பிளாக் டிக்கெட் (கள்ளச்சந்தை) விற்றுத் திரைப்பட பார்க்க அனுமதி சீட்டை விற்ற அயோக்கியப் பையன்கள்தானே இப்போது அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு எங்களைக் கேள்வி கேட்கிறார்கள்?” என்று ஆவேசப்பட்டார். கட்சியின் காசுலேயோ அல்லது திரள் நிதியிலோ கைவைக்கவில்லை என்றும், தன்மானத்தோடு உழைத்துத் தன் மக்கள் தன்னைத் தாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“குழந்தைக்கு மாத்திரை கொடுக்கத் தெரியாதவன் எப்படி நாட்டை ஆள்வான்?”
தமிழக முதல்வர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்றதைக் கடுமையாக விமர்சித்த சீமான், உடல்நிலை சரியில்லாத குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஐபிஎல் மேட்ச் பார்க்கப் போனவரால் எப்படி ஒரு நாட்டை நிர்வாகம் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். “ஒரு குழந்தைக்குத் தகப்பனாக இருக்கவே தகுதியற்றவன் எப்படி மந்திரியாக இருக்க முடியும்? மாத்திரையைக் கடன்கார்டில் நசுக்கிப் பொடியாக்கிப் கொடுப்பதற்கும், அதற்குக் பக்கத்தில் 500 ரூபாய் நோட்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டுத் துகிலுரித்தார்.
“மின் கட்டணக் கொள்ளையும், போதைப்பொருள் நாடகமும்!”
200 யூனிட் இலவச மின்சாரம் என்று கையெழுத்து போட்டுவிட்டு, மக்களை 4,000 ரூபாயும் 17,000 ரூபாயும் கட்டச் சொல்லி அழ வைப்பதா ஆட்சி? என்று சாடிய சீமான், டாஸ்மார்க்கில் விற்கும் பீரும், பிராந்தியும் கரும்புச் சாறா இல்லை கோயில் தீர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார். போதைப்பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு முதல்வர் 3 கி.மீ., 12 கி.மீ. ஓடுவது வெறும் கேலிக்கூத்து என்றும், தெருத்தெருவாகத் டாஸ்மார்க்கைத் திறந்துவிட்டுவிட்டுப் போதை ஒழிப்புப் பேரணி நடத்துவது ஏமாற்று வேலை என்றும் அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளாா்.
