spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம்

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம்

-

- Advertisement -

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள், பெயரை பிறப்புச் சான்றிதழில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது

இதுதொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் விடுபட்டிருந்தால் அதுகுறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து பெயரை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயரை சேர்க்கலாம் என்றும், பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த ஆண்டுக்குள் பெயரை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவரின் முழு பெயரை சேர்க்கலாம் அல்லது பெயரில் சில எழுத்துகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும், அந்த திருத்தத்தையும் மேற்கொள்ளலாம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப இதற்காக சிறப்பு முகாம் நடத்தலாம் என்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

 

MUST READ