spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்... வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!

கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்… வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே தாய், தந்தையரை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளிடம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

we-r-hiring

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சி நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் – சுமதி தம்பதியர். இவர்களுக்கு ஸ்வாதி, ஸ்வேதா என்கிற 2 பெண் குழந்தைகளும், சிவேஷ்வர் என்கிற ஒரு ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். ஸ்வாதி, ஸ்வேதா இருவரும் கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பும், சிவேஷ்வர் அரசு உதவிபெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். சிவக்குமார் தையல் கலைஞராக இருந்து குடும்பத்தை வழி நடத்தி உள்ளார். இந்நிலையில், சுமதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மனைவியை இழந்த சிவக்குமார் மூன்று குழந்தைகளையும் பராமரிப்பதற்காக தையல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .

தாய், தந்தையை இழந்த 3 பேரும் தனியாக கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். மூன்று பேரும் பள்ளிக்கு செல்வதால் எந்தவிதமான வேலைக்கு செல்ல முடியாமல் போதுமான வருமானம் இன்றி அன்றாடம் வாழ்க்கையை நடத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர. மூவருக்கும், வீட்டின் அருகில் உள்ளவர்கள் தங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில் 3 பேரும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தாமல் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். மூன்று குழந்தைகளுக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்க்கல்வி கற்பதற்கு வழிகாட்ட வேண்டும் என்றும், கூரை வீட்டில் இருக்கும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு வீடு கட்டி தர வேண்டும் என குழந்தைகள் உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்று தமிழக அரசின் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தை ஒருவருக்கு மாதம் தலா ரூ.2000 வீதம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், உதயபாஸ்கரன் என்பவர் தானமாக 800 சதுரஅடி இடத்தை வழங்கியுள்ளார். அதற்கு தமிழக அரசு பட்டா ஏற்பாடு செய்து, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரன் ஆகியோர் பட்டாவினை நேரில் சென்று வழங்கினர். தொடர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 குழந்தைகளிடமும் செல்போன் மூலம் நலம் விசாரித்து, தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும், அவர்களுடைய கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ