சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கவுள்ளார்.
“நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்”- நடிகை கவுதமி பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் தன் உரைக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறியும், தனக்கு வழங்கப்பட்ட உரையில் உண்மைக்கு மாறான சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்ததாகக் கூறியும், அந்த உரையை முழுவதுமாகப் படிக்காமல் நான்கு நிமிடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொண்டார்.
தொடர்ந்து, ஆளுநர் உரையை சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு முழுவதுமாக வாசித்ததுடன் ஆளுநருக்கு பதிலளிக்கும் படியும், அவரை விமர்சிக்கும்படி வகையிலும் பேசியதை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.15) பதிலுரை அளிக்கவுள்ளார். இதில் ஆளுநர் மீதான விமர்சனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!
இந்த நிலையில், முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணிக்கும் வகையில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.