
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியவர்கள் தங்கள் மனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது

இதன்படி 20.10.2016 க்கு முன்பாக தாங்கள் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைகளை ஒவ்வொருவரும் அங்கீகாரம் (CMDA/ DTCP/ APPROVAL) செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பரப்பளவு கொண்ட மனைகளையும் அங்கீகாரம் செய்து கொள்ளலாம். இந்த கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்த திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் மனைகளுக்கு O.S.R கட்டணம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

அனுமதியற்ற மனைகள் அல்லது அனுமதிக்கு மாறான கட்டுமானங்களை முறைப்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலத்தில் எந்த மனையோ அல்லது கட்டுமானத்தையோ பத்திரவு பதிவு மூலமாக விற்கவோ வாங்கவோ மற்றும் வாரிசுகளுக்கு தானசெட்டில்மெண்ட் செய்ய இயலாத நிலை ஏற்படும். முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு அல்லது கட்டடங்களுக்கு அடிப்படை வசதிகள்,குடிநீர், மின் இணைப்பு மற்றும் வடிகால் வசதிகள் போன்றவை உள்ளாட்சி அமைப்பினால் தொடர்ந்து செய்து தர இயலாத நிலை ஏற்படும். இந்த சலுகைகள் 29.2.2024 வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வீர், பயனடைவீர் என தெரிவிக்கபட்டுள்ளது.
