spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் - தலைவர்கள் வாழ்த்து..

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..

-

- Advertisement -
உதயநிதி ஸ்டாலின்
நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “தூய்மையான அன்பு, அளவற்ற உற்சாகம் ஆகியவற்றை நமக்கு வாரி வழங்கும் குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம். குழந்தைகளின் சிரிப்பு தான் நம் உலகத்துக்கு ஒளியூட்டுகிறது. பகிர்ந்தளித்தல், இரக்கவுணர்வு, நேசம், ஒற்றுமை, சமத்துவம், பேரன்பு என குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான பண்புகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி, குட்டி மழலை டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் - தலைவர்கள் வாழ்த்து..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் வழங்க உறுதியேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ