Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு

-

- Advertisement -

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உல்க தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

Home

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.176 அதிகரித்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,800-க்கு விற்கப்படுகிறது.

MUST READ