
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 16ம் தேதி இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிட்டிருந்தது. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக் அதிகரித்தது.

இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு இன்று 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர். இதில் தேர்வு வாரியத்தின் நிபந்தனை படி தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே , அடுத்தத் தாள்( பகுதி -2) திருத்தப்படும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
