Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

-

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்., 6 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பிளஸ் 2 மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்., 13 நள்ளிரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டித்து, நீட் நுழைவு தேர்வு முதுநிலை இயக்குனர் சாதனா பரஷார் உத்தரவிட்டார். அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. நள்ளிரவு 11.59 மணிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

MUST READ