Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் ராஜேந்திர சோழன் இன்று பிறந்த நாள்

தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் ராஜேந்திர சோழன் இன்று பிறந்த நாள்

-

தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்த கோமகன்! கோப்பரகேசரி என்ற பட்டத்தோடு அரியணையேறிய சோழர்குலத் திலகம்.வங்கக்கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம் போன்ற இடங்களில் எல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் ஒரு வேங்கையைப் போன்று அலைகடலில் சீறிப் பயணித்து வெற்றிக்கொடி நாட்டியவன்.மாமன்னர் இராசராச சோழருக்குப் பிறகு மிகப் பெரியளவில் படைத்திரட்டி, கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த பேரரசர் இராசேந்திர சோழர் மட்டுமே. சீறும் அலைகடல் மீது பல கலம் செலுத்தியவன் என்று அவன் மெய்கீர்த்தி பறைசாற்றுகிறது.

இராசேந்திர சோழர் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை நாச்சியார் என்கிற தேவரடியாரை விரும்பினான். பேரரசரின் பிறந்தநாளான திருவாதிரை நாட்களில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலுக்கு வருகிற சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு அமுது படைப்பதற்காக 72 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்தாள் பரவை நாச்சியார். ஒரு வேலி நிலமென்பது இன்றைக்கு ஆறேகால் ஏக்கருக்கு சமம். அப்படியெனில், கிட்டத்தட்ட 444 ஏக்கர் நிலத்தை கொடையாக அளித்திருக்கிறாள். இதில் 44 வேலி நிலத்தில் 4500 கலம் நெல் கோவில் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கலம் நெல் என்பது இன்றைய காலகட்டத்தில் 96 படிக்கு சமம். இறுதிவரை போர்க்களத்தில் தோல்வியை தழுவாத பேரரசனாக கோலோச்சியவர் இராசேந்திர சோழன் ஆவான்.

MUST READ