மதுரையில் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ சேது சமுத்திரம் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாடு மக்கள் கவலையில் உள்ளனர். கருத்து கேட்பு கூட்டம் நடந்தபோது பாஜக உள்ளிட்ட யாரும் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திட்டம் முடியும் தருவாயில் இருந்தபோது நிறுத்திவிட்டனர். மத்திய அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, நிதிஷ்குமார், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் ஆடம் பிரிட்ஜ் வழியாக பாலம் அமைக்க கையெழுத்திட்டனர். ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோன்ஸ் வால்டர் ஆர்ய்வு செய்து ஆடம் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு எந்த ஆதரமும் இல்லை எனக் கூறினார். பல லட்சம் ஆண்டு புராதன சின்னம் என சுப்பிரமணியன்சாமி கூறுவார். ஆனால் ஆதாரம் கேட்டால் நம்பிக்கை என கூறுவார்.
சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியவர்கள் பாவிகள். சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்தவர்கள் விளங்க மாட்டார்கள் 700 கோடி ரூபாய் நஷ்டம். யாருக்கு உனக்குத்தான்யா நஷ்டம் மாநில அரசுக்கு இல்லை. அய்யா வீரமணி மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன், அது தான் நியாயம், தர்மம்.. அய்யா வீரமணிக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு உள்ளது. தவறு நடக்கும்போது முரடனாக இருப்பேன். அய்யா வீரமணிக்குக்கு திருப்பி அடிக்க பலமில்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இருக்கிறது” எனக் கூறினார்.
