Homeசெய்திகள்தமிழ்நாடுஈசிஆர் சாலையில் பராமரிப்பு பணி- கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்

ஈசிஆர் சாலையில் பராமரிப்பு பணி- கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்

-

- Advertisement -

ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic

we-r-hiring

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு அதிபர்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரிகள் பிப்ரவரி 1-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் புதுச்சேரி ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் செல்ல நேரிடும் என்ற கோணத்தில் மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அவற்றை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் மாமல்லபுரம் முதல் கல்பாக்கம் வரையிலான சாலையின் போக்குவரத்தை புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒருவழி பாதையில் கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் என்ற இடத்தில் திருக்கழுக்குன்றம் மார்க்கமாக சென்று கொத்திமங்கலம் என்ற இடத்தில் திருப்பப்பட்டு பழைய மாமல்லபுரம் சாலை பூஞ்சேரி , மாமல்லபுரம் சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பணிகள் மூன்று நாட்கள் நடைபெறும் எனவும் இதற்கு மூன்று கோடி ரூபாய் செலவாகும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ