spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!

அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!

-

- Advertisement -

சட்ட மேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமிஷாவை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விசிகவின் பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில் அக்கட்சியினர் தாம்பரத்திலிருந்து கிழக்கு கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராவும் அமித்ஷாவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 10 நிமிடத்திற்கு மேலாக மின்சார ரயில் நின்று இருந்தது.

we-r-hiring

அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!இதை தொடர்ந்து தடை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை இழிவு படுத்தி பேசினார். அது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!இவ்வாறு பேசியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்  சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சால் தமிழ்நாடு போர்க்களமாக மாற்றியுள்ளது. பாஜகவை சேர்ந்த அமித்ஷாவும் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னி அரசு வலியுறுத்தினார்.

மேலும், ஒரே நாடு என்பது அவர்களுக்கு இந்துராஸ்டரம் தான். இந்து ராஜ்ஜியத்தை கட்டமைக்க பாஜக முயற்சி செய்கிறது. அதுதான் அவர்களுடைய அஜன்டா என்றும் குற்றவாளிகள் தான் பாஜகவில் அமைச்சர்களாக உள்ளனர். திரிபுவாத அரசியலை தான் பாஜக செய்து வருவதாகவும் வன்னி அரசு கூறினார்.

இது தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு அருகாமையில் இருக்கக்கூடிய மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

MUST READ