
மதுரையில் இருந்து சென்னை மற்றும் கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி முறிவு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்!
அதன்படி, மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் முன்னதாக காலை 06.40 மணிக்கு புறப்படும் என்றும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் முன்னதாக காலை 09.20 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் 25 நிமிடங்கள் முன்னதாக காலை 07.00 மணிக்கு புறப்படும் என்றும், விழுப்புரம் எக்ஸ்பிரஸ் அதிகாலை 03.35 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி
மதுரை- செங்கோட்டை இடையே மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டதால் சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், இரவு 09.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் என்றும், அதேபோல், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு அதிகாலை 04.30 மணிக்கு வரும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.