spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உள்பட 4  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உள்பட 4  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹதிமாணி நியமிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக பொறுப்பு வகித்த செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ், பரங்கிமலை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

we-r-hiring

tamilnadu assembly

பரங்கிமலை காவல் துணை ஆணையராக இருந்த சுதாகர் ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை வகித்து வந்த  கே.பிரபாகர் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு
துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

MUST READ