spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி

-

- Advertisement -

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி கைதான யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாகச பயணத்தின் போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Twin Throttlers என்னும் யூடியூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். கோவையை பூர்விகமாக கொண்ட டிடிஎஃப் வாசன் பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

we-r-hiring

தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள டிடிஎஃப் வாசனின் யூட்யூப் சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கை மட்டும் 2 மில்லியனை தாண்டி உள்ளது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டுள்ளன. அண்மையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்ற போது, நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதி செம்மல் அவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

MUST READ