spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபத்ம விருதுகளுக்கு தேர்வானர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

பத்ம விருதுகளுக்கு தேர்வானர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

-

- Advertisement -

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

ttv dhinakaran

அதே போல, பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கும் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன் அவர்கள், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம் அவர்கள், மருத்துவர் நாச்சியார் அவர்கள் உட்பட மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

MUST READ