Homeசெய்திகள்தமிழ்நாடு12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாலம் பணிகள் நிறைவு!

12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாலம் பணிகள் நிறைவு!

-

 

12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாலம் பணிகள் நிறைவு!
Video Crop Image

சென்னை அருகே 12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாதைப் பணிகளை ரயில்வே ஊழியர்கள் முடித்துள்ளனர்.

1000 இடங்களில் மருத்துவ முகாம்

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெமிலிச்சேரி கிராமத்திற்கு செல்ல ரயில்வே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். ஏராளமான ரயில்கள் நெமிலிச்சேரியில் கடந்து செல்வதால் பாலம் அமைக்கும் பணிகள் சவாலாக இருந்தது.

ரயில் போக்குவரத்து நிறுத்தி, பாலம் அமைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த ரயில்வே அதிகாரிகள், 24 மணி நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க, தரைப்பாலம் அமைக்கத் திட்டமிட்டனர். அதற்காக, 12 அடி உயரம், 12 அடி அகலம் கொண்ட கான்கிரீட் ரெடிமேட் பாலங்கள் அமைக்கப்பட்டன.

மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

வழக்கத்தை விட 50 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டு, சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு பணிகள் தொடங்கினர். 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ராட்சத கிரேன்கள், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மேம்பாலம் பணிகள் நடைபெற்றன.

12 மணி நேரத்தில் சுமார் 50 அடி தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 அடிக்கு பாலம் அமைக்கும் பணிகளை வரும் நவம்பர் 12- ஆம் தேதிக்குள் முடிக்க ரயில்வேத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ