- Advertisement -
அரசு மருத்துவமனையில் கான்கிரீட் மேற்கூரை விழுந்து இரண்டு பேருக்கு படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் நான்காவது வார்டில் உள்ள நோயாளியைப் பார்க்க வந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அந்த மருத்துமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


