Homeசெய்திகள்தமிழ்நாடு"மாசத்துக்கு 2 பஞ்ச்.. ஏ4 சீட் அரசியல்!" விஜய்யை வெளுத்து வாங்கிய கோடீஸ்வரன்!

“மாசத்துக்கு 2 பஞ்ச்.. ஏ4 சீட் அரசியல்!” விஜய்யை வெளுத்து வாங்கிய கோடீஸ்வரன்!

-

- Advertisement -

தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் சூழல், சட்டமன்ற விவாதங்கள் மற்றும் தமிழக வெற்றித் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் குறித்து ‘தி வெர்டிக்ட்’ (The Verdict) யூடியூப் ஊடகத் தளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்."மாசத்துக்கு 2 பஞ்ச்.. ஏ4 சீட் அரசியல்!" விஜய்யை வெளுத்து வாங்கிய கோடீஸ்வரன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான பதிலடி விமர்சனம்
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சி.பி.எம் தலைவர்கள், “அரசியல் களத்திற்கு வரும் முன் சட்டங்களையும் வரலாற்றையும் படியுங்கள்” என்று தவெக தலைமையை அறிவுறுத்தியிருந்தனர்.

we-r-hiring

இது குறித்துப் பேசிய பத்திரிகையாளர் கோடீஸ்வரன், தவெக-வின் செயல்பாடுகளை எள்ளல் பாணியில் சாடினார், “நாங்கள் சரியாகப் படிக்காததால்தான் சினிமாவையும் ரசிகர் மன்ற வைப்பையும் வைத்து அரசியல் களத்தில் இவ்வளவு பெரிய இடத்திற்கு வர முடிந்தது. எங்களைப் போய் படிக்கச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நன்றாகப் படித்திருந்தால் ஐஏஎஸ், கலெக்டர் என்று அதிகாரியாகப் போயிருப்போம். ஆனால், அந்த கலெக்டருக்கே உத்தரவு போடும் இடத்தில் இருப்பது அமைச்சர்கள்தான்.

சுந்தர் பிச்சையே படித்து கூகுள் சி.இ.ஓ ஆனாலும் அவரும் ஒரு நிறுவனத்தின் வேலைக்காரர்தான். ‘நாங்கள் படிக்காததால்தான் இந்த உயரத்தில் இருக்கிறோம்; படித்துவிட்டால் உங்களைப் போலத் தெருவில் இறங்கி போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்’ என்ற மனநிலையில்தான் தவெக இயங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், தவெக-வுக்கும் படிப்பிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.”"மாசத்துக்கு 2 பஞ்ச்.. ஏ4 சீட் அரசியல்!" விஜய்யை வெளுத்து வாங்கிய கோடீஸ்வரன்!

“ரீமேக் பாலிடிக்ஸ்” – 10 பஞ்ச் டயலாக்குகள் போதுமா?
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை ‘ரீமேக் பாலிடிக்ஸ்’ (Re-make Politics) என்று விமர்சித்த அவர், “மாதத்திற்கு இரண்டு பஞ்ச், வருடத்திற்கு ஒரு 10 பஞ்ச் டயலாக்குகள் பேசினால் போதும்; நான்கு பேர் ஏ4 தாளில் பஞ்ச் லைன் எழுதித் தந்தால் அதை அப்படியே பேசிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சினிமாவில் கடலுக்கு அடியிலிருந்து மனிதன் உயிருடன் வெளிவருவது போன்ற காட்சிகளை ரசிகர்கள் நம்புவது போல, அரசியலிலும் எல்லாவற்றையும் நம்புவார்கள் என்ற சினிமா மைண்ட்செட்டிலேயே இயங்குகிறார்கள். இதில் மாநில உரிமைகள் பற்றியோ, சட்டப் பிரிவுகள் பற்றியோ எவ்வித ஆழமான புரிதலும் இல்லை.”

அதிமுக இடத்தை நோக்கும் ‘ஒட்டகக் கதை’ View
சர்க்காரியா கமிஷன், மிசா காலத்து விவகாரங்கள் போன்ற 50 ஆண்டுகாலப் பழமையான சம்பவங்களை மீண்டும் மீண்டும் பேசி திமுக மீது ஊழல் பிம்பத்தை ஏற்படுத்த முயல்வதன் பின்னணியில் பெரிய வியூகம் இருப்பதாகக் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார். “முன்பு ஒரு கதையில் ஒட்டகம் முதலில் கூடாரத்திற்குள் தலையை விட்டு, பிறகு உடம்பையும் நுழைத்து கடைசியில் கூடாரத்தின் உரிமையாளரையே வெளியே அனுப்பியது போல, அதிமுக இருக்கும் எதிர்க்கட்சி இடத்தை மெதுவாகக் கைப்பற்றவே தவெக முயல்கிறது. அதிமுக பாவம் பார்த்ததும் பயந்ததுமே இதற்கு வழிவகுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.

அரசியல் நாகரிகமும் பதவி மாண்பும்
சட்டமன்ற விவாதங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுவழக்கு குறித்துப் பேசிய அவர், “ஒரு நாற்காலியில் யார் அமர்கிறார்கள் என்பதை விட, அந்த நாற்காலிக்கு அவர்கள் சேர்க்கும் கண்ணியமும் மாண்பும்தான் முக்கியம். மறைந்த அப்துல் கலாம் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தபோது அந்தப் பதவிக்கே உலகளவில் தனிப் பெருமை கிடைத்தது. பதவிக்கு வரும் தலைவர்கள் அதன் மாண்பைக் காக்கும் வகையில் அரசியல் நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

விஜய்க்கு என்னாச்சு? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாரா? ‘பேரலை’ மில்டன் உடைத்த பகீர் உண்மை!

MUST READ