Homeசெய்திகள்தமிழ்நாடு"பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?"- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?”- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

-

 

udhayanidhi stalin tn assembly

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் விலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரையாற்றிய தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 21 உயிர்களை இழந்துள்ளோம். நீட் தேர்வு உயிரிழப்பிற்கு மத்திய அரசும், அ.தி.மு.க.வும் தான் காரணம். உண்ணாவிரதப் போராட்டத்தில் நீட்டால் உயிரிழந்தவர்களின் அண்ணனாகப் பங்கேற்றுள்ளேன்.

மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் – அண்ணன் தற்கொலையை விசாரிக்காததால் விரக்தி

அமைச்சர் பதவிப் போனாலும் பரவாயில்லை என்று தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆளுநர் வெறும் தபால்காரர்; அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்துகிறார் ஆளுநர். பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் தேர்தலில் போட்டியிட தயாரா? ஆளுநரை எதிர்த்து ஏன் கேள்விக் கேட்கக் கூடாது? தமிழக மக்களை பற்றி ஆளுநருக்கு ஒன்றும் தெரியாது.

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் மட்டுமே. நீட் என்பது தகுதியற்றத் தேர்வு; நீட் தேர்வை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடியல். தமிழக மாணவர்கள் சற்று பொறுமைக் காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ