காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியம், ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி. கருணாநிதி மகள் திருமணம் சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் நடைபெற்றது.


திருமண விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கழகத்தின் மூன்றாவது தலைமுறையினரின் திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜக- அதிமுக அடிமைப்படுத்துவதை போல் ஒருவர் ஒருவரை அடிமைப்படுத்தாமல், சுயமரியாதை சிந்தனையுடன், பெரியாரும் பகுத்தறிவு போல, பேரறிஞர் அண்ணாவும் மாநில சுயாட்சியும் போல, முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தமிழும் போல, கழக தலைவரும் திராவிட மாடல் ஆட்சியைப் போல, சிறப்பாக இணைந்திருக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
விழாவில் அமைச்சர் தாமோ அன்பரசன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன் செல்வப் பெருந்தகை எஸ். ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
