spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

-

- Advertisement -

 

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.29) தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

we-r-hiring

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி

சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992- ஆம் ஆண்டு தமிழக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கிராம மக்களை அடித்ததுடன், 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 269 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு 19 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த காலகட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 நபர்கள் உயிரிழந்துவிட்டதால், மீதமுள்ள 215 நபர்களும் குற்றவாளிகள் என 2011- ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்

இதற்கிடையே வழக்கை விசாரித்த வேல்முருகன், கடந்த மார்ச் 4- ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் நீதிபதி வேல்முருகன் இன்று (செப்.29) தீர்ப்பளிக்கிறார்.

MUST READ