Homeசெய்திகள்தமிழ்நாடுவாச்சாத்தி கொடூரம்- குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

வாச்சாத்தி கொடூரம்- குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!

கடந்த 1992- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளால், அந்த கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், “வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதில் குற்றவாளிகளிடம் ரூபாய் 5 லட்சம் வசூலித்தும், அரசின் ரூபாய் 5 லட்சமும் சேர்த்து வழங்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!

குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால், அவர்களை உடனடியாக கைது செய்ய கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை உறுதிச் செய்தார்.

MUST READ