Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?- வைரமுத்து

எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?- வைரமுத்து

-

எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?- வைரமுத்து

இந்தியை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி டிவிட்டரில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ள கவிஞர் வைரமுத்து” சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம். இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர் நெருப்பை அரிப்பதில்லை கரையான். தமிழர்கள் இந்தி எதிர்ப்பு உணர்வில் அல்லாமல் இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வில் திளைத்தவர்கள். இந்தியை எதிர்ப்பது, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர்.எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ