Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்..!

விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்..!

-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறவுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் :வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க வேண்டும். தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு. பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ