Homeசெய்திகள்தமிழ்நாடுமாடு பூட்டி ஏர் உழுத வேலூர் மாவட்ட ஆட்சியர்

மாடு பூட்டி ஏர் உழுத வேலூர் மாவட்ட ஆட்சியர்

-

மாடு பூட்டி ஏர் உழுத வேலூர் மாவட்ட ஆட்சியர்

விவசாயியுடன் கலப்பை பிடித்து ஏர் உழுது மகிழ்ந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜார்தான் கொல்லை கிராமத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட போது, விவசாயி ஒருவர் விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தார்.

அதை கண்ட ஆட்சியர் அங்கு சென்று விவசாய உடன் கலந்துரையாடிவிட்டு கலப்பையை பிடித்து உழுதார். தற்போது வெளியாகி உள்ள இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ