Homeசெய்திகள்தமிழ்நாடுதுணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

-

 

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!
Photo: Periyar University

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் அரசின் அனுமதியின்றி நிறுவனத்தைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். துணைவேந்தருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை முறையீடு செய்திருந்தது. அதேபோல், தன் முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!

துணைவேந்தரின் மனு இன்று (ஜன.19) காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “துணைவேந்தர் ஜெகநாதன் நடவடிக்கைகளில் குற்றநோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை; ஆவணங்களைச் சரிபார்த்ததில் குற்றநோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை” எனக் கூறிய நீதிபதி, துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ