Homeசெய்திகள்தமிழ்நாடுஓமனுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக பெண் கதறல்

ஓமனுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக பெண் கதறல்

-

- Advertisement -

ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண் அங்கு தன்னை 16 மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

women

we-r-hiring

சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பத்மா, அதிமுக நிர்வாகியாக இருந்துள்ளார். அவருக்கு, கடன் சுமை காரணமாக கடனை கட்டமுடியாமல் கடனுக்காக வாங்கிய வட்டியையும் கட்ட முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தெரிந்தவர்கள் மூலமாக ஓமன் நாட்டில் வீட்டை பராமரிக்கும் வேலை இருப்பதாக தெரியவரவே கடந்த ஆண்டு அங்கு சென்றுள்ளார்.

வீட்டு பராமரிப்பிற்கு சென்ற இடத்தில் 15 பேர் அளவில் 4 மாடிகள் கொண்ட வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த 15 பேர் சாப்பிட பிறகு அந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது துணிகளையும் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என ஒரு நிமிடம் கூட தன்னை விடுவதில்லை எனவும் காலை 5மணிக்கு வேலை தொடங்கி நள்ளிரவு 1மணி வரை வேலை வாங்குவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டுமென கூறினால் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டுவதாகவும், ஒருவேளை தான் இறந்து விட்டால் தன் சடலத்தை இந்தியாவில் ஒப்படைக்க வேண்டுமென்றாலும் அதற்கும் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் சடலத்தையும் ஒப்படைப்போம் என வீட்டின் உரிமையாளர் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். வேலைக்கு வந்து சிக்கி இருக்கும் தன்மை தமிழக முதல்வர் எப்படியாவது மீட்டு தாய் நாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ