விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று (ஜூலை 11) ஆலோசனை நடத்துகிறார்.
முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!
10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சட்டமன்றத் தொகுதி வாரியாக கல்வி உதவித்தொகையை கடந்த ஜூன் 17- ஆம் தேதி நடிகர் விஜய் வழங்கினார். இதில், அடுத்த தலைமுறை வாக்காளர்கள் என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியது பரபரப்பாகியது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 234 தொகுதிப் பொறுப்பாளர்களை நடிகை விஜய் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். இந்த நிகழ்வு, சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது அந்த காலம்… தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்- இது இந்த காலம்!
அதைத் தொடர்ந்து, பொறுப்பாளர்களுக்கு மதிய உணவு விருந்தையும் நடிகர் விஜய் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.