Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

-

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கின.அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குகள் சரிபார்க்கும் பணிகள் இன்று (ஏப்ரல் 24) காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கின. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்ககளின் எண்ணிக்கையை இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். சரிபார்ப்புப் பணி முடிந்த பின், தொகுதி வாரியாக வாக்குகள் புள்ளி விவரங்கள் வெளியாகும்.

we-r-hiring

இந்தச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னரே, தேர்தல் அலுவலர்கள் இறுதி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

2026 தேர்தல் –  குறைந்த எண்ணிக்கையில் பதிவான வாக்குகள்,  அதிக ‘சதவீதத்தின் பின்னணி என்ன?

MUST READ